திங்கள், 1 பிப்ரவரி, 2010
அதிமுக நிர்வாகிகள்
உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள நிரந்திர பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.முதல் முறையாக தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் மாவட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இது குறித்து அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படி கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, கிளை, வார்டு, வட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா, அவைத் தலைவராக மதுசூதனன் நியமி்க்கப்பட்டுள்ளனர். வட சென்னை மாவட்ட பொறுப்பாளராகவும் மதுசூதனன் இருப்பார்.அதிமுக ஆலோசகராக இருந்த சி.பொன்னையன், கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் அவர் செயல்படுவார்.கட்சியின் பொருளாளராக பன்னீர்செல்வம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளராக அவர் செயல்படுவார்.தலைமை நிலையச் செயலாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், ஈரோடு புறநகர் மற்றும் நீலகிரி மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்படுவார்.கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக விசாலாட்சி நெடுஞ்செழியன், சு.முத்துசாமி (பொறுப்பாளர்-ஈரோடு, நாமக்கல்), ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத், என்.தளவாய் சுந்தரம் (பொறுப்பாளர் -கன்னியாகுமரி), செம்மலை (பொறுப்பாளர்-சேலம் மாநகர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு), பா.வளர்மதி (பொறுப்பாளர்-விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம்), கருப்பசாமி (திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொறுப்பாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக டி.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவர் திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் பதவிகளையும் வகிப்பார்.கொள்கை பரப்புச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மு.தம்பிதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் இருப்பார்.பி.எச்.பாண்டியன்-அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர், பொள்ளாச்சி ஜெயராமன்-தேர்தல் பிரிவு செயலாளர் (பொறுப்பாளர் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர்), பாலகங்கா- தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் (பொறுப்பாளர் - திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு) ஆகியோரும்துரை. கோவிந்தரராஜன்- விவசாய பிரிவு தலைவர், சோழன் பழனிச்சாமி- விவசாய துறை செயலாளர் (பொறுப்பாளர்- சிவகங்கை), நயினார் நாகேந்திரன்- ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் (பொறுப்பாளர்- திருநெல்வேலி மாநகர்)ஆர்.சின்னசாமி- அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், ஆதிராஜாராம்- எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் (பொறுப்பாளர்- திருவள்ளூர், வேலூர் கிழக்கு மற்றும் மேற்கு), ஆர்.பி.உதயக்குமார்- மாணவரணி செயலாளர் (பொறுப்பாளர் - மதுரை மாநகர், விருதுநகர்), கோகுல இந்திரா- மகளிர் அணி செயலாளராகவும்,டாக்டர் மைத்ரேயன்- மருத்துவ அணி தலைவர் (பொறுப்பாளர்- தென்சென்னை, காஞ்சிபுரம் கிழக்கு மற்றும் மேற்கு), டாக்டர். பி.வேணுகோபால்- மருத்துவ அணி தலைவர், ஜஸ்டின் செல்வராஜ் -சிறுபான்மை நலப்பிரிவு தலைவர், அன்வர் ராஜா- சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர், சேதுராமன்- வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், பி.எச்.மனோஜ் பாண்டியன்- வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும்.பழ.கருப்பையா-இலக்கிய அணித் தலைவர், வைகை செல்வன்- இலக்கிய அணிச் செயலாளர், கே.கே. கலைமணி- மீனவர் பிரிவுச் செயலாளர், ஜெனிபர் சந்திரன்- மீனவர் பிரிவு இணைச் செயலாளர் (பொறுப்பாளர்- தூத்துக்குடி), ஆர்.கமலக்கண்ணன்- அமைப்புச் சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர், டாக்டர் எஸ்.வெங்கடேசன்- இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் (பொறுப்பாளர்- தஞ்சாவூர் வடக்கு, தெற்கு நாகப்பட்டினம், திருவாரூர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள்:அதே போல மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களது விவரம்:வடசென்னை- பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ.தென்சென்னை- செந்தமிழன் எம்.எல்.ஏ.திருவள்ளூர்- மாதவரம் வி.மூர்த்திகாஞ்சீபுரம் கிழக்கு- சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.காஞ்சீபுரம் மேற்கு- திருத்தணி கோ.அரி எம்.எல்.ஏ.வேலூர் கிழக்கு- எல்.கே.எம்.பி. வாசு.வேலூர் மேற்கு - கே.சி. வீரமணி.திருவண்ணாமலை வடக்கு- முக்கூர் என். சுப்பிரமணியன்.திருவண்ணாமலை தெற்கு - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.கடலூர் கிழக்கு- எம்.சி. சம்பத்கடலூர் மேற்கு-ஆ. அருண்மொழிதேவன்.விழுப்புரம் வடக்கு-சி.வி.சண்முகம்.விழுப்புரம் தெற்கு- இரா.குமரகுரு எம்.எல்.ஏ.கிருஷ்ணகிரி-சி.வி. ராஜேந்திரன்தர்மபுரி-ஆர்.அன்பழகன்சேலம் மாநகர்-எம்.கே. செல்வராஜ்சேலம் புறநகர் (கிழக்கு)- எஸ்.கே.செல்வம்சேலம் புறநகர் (மேற்கு)- எஸ்.ஆர்.சரவணன்நாமக்கல்- பி.தங்கமணி.ஈரோடு மாநகர்- கே.வி. ராமலிங்கம்ஈரோடு புறநகர் மாவட்டம் - என்.டி.வெங்கடாசலம்.திருப்பூர்-திருப்பூர் சிவசாமிகோவை மாநகர்-செ.ம.வேலுசாமிகோவை புறநகர்- எஸ்.பி. வேலுமணிநீலகிரி-எம்.செல்வராஜ்திருச்சி மாநகர்- ஆர்.மனோகரன்திருச்சி புறநகர்- சுப்பு என்ற பே.சுப்பிரமணியன்பெரம்பலூர்- ப.இளவழகன்கரூர்- வி.செந்தில் பாலாஜிதஞ்சை (வடக்கு)- எம். ரெங்கசாமிதஞ்சை (தெற்கு)- ஆர். வைத்திலிங்கம்நாகை- ஓ.எஸ்.மணியன்திருவாரூர்- இரா. காமராஜ்புதுக்கோட்டை- டி. கருப்பையாமதுரை மாநகர்- செல்லூர் கே. ராஜுமதுரை புறநகர்- எம். ஜெயராமன்தேனி- தங்கத் தமிழ்ச்செல்வன்.திண்டுக்கல்- இரா. விசுவநாதன்விருதுநகர்- கே.கே.சிவசாமிசிவகங்கை- கே. கே.உமாதேவன்ராமநாதபுரம்- கே.சி. ஆணிமுத்துநெல்லை மாநகர்- பாப்புலர் வி. முத்தையாநெல்லை புறநகர்- பி. செந்தூர்பாண்டியன்தூத்துக்குடி- பள்ளத்தூர் டி. முருகேசன்.கன்னியாகுமரி- கே.டி. பச்சைமால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக